செய்திகள்

நிர்வாணமாய் போட்டோ பகிர்ந்த விஜய் தேவரகொண்டா - இப்படியா பண்ணுவிங்க ? - ரசிகர்கள் அதிர்ச்சி

DIN

லைகர் படம் தொடர்பாக நிர்வாணமாய் இருக்கும் புகைப்படத்தை விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவர் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடிக்கிறார். 

மேலும் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. 

மணி சர்மா இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைக்க, விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்ததாக விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் பூரி ஜெகந்நாத் இருவரும் இணைந்து ஜன கன மன என்ற படத்தில் இணைந்து பணியாற்றிவருகின்றனர். 

இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா கையில் பூங்கொத்துடன் நிர்வாணமாய் நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ''இந்தப் படம் என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. உடல் அளவிலும், மனதளவிலும், மிகவும் கடினமான பாத்திரம். நான் உங்களிடம் எல்லாவற்றையும் கொடுக்கிறேன். விரைவில் வருகிறது 'லைகர்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக 'பிகே' படத்தின் போஸ்டரில் ஆமீர் கான் நிர்வாணமாய் காட்சியளித்தார். அந்த நேரத்தில் பிகே பட போஸ்டர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரசிகர்களில் ஒரு சிலர் விஜய் தேவரகொண்டாவின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். மற்றும் சிலர் படத்தின் விளம்பரத்துக்காக இப்படியா பண்ணுவிங்க? என விமர்சித்துவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT