செய்திகள்

'தி கிரே மேன்' ஆங்கில படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி ? மனம் திறந்த தனுஷ்

தி கிரே மேன் இணைய தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என நடிகர் தனுஷ் அமெரிக்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

DIN

தி கிரே மேன் இணைய தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என நடிகர் தனுஷ் அமெரிக்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

நடிகர் தனுஷ் தற்போது தி கிரே மேன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை இயக்கிய ருசோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ருசோ) இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் ரியான் காஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  இந்தப் படம் நேற்று (ஜூலை 10) அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. திரையிடல் நிகழ்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், எனக்கு எப்படி இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது என தெரியவில்லை. நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் நிறுவனம் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இது பெரிய படம் என்றனர். எந்த படம், என்ன படம் என நான் கேள்வி எழுப்பியபோது, அதனை சொல்வதற்கு முதலில் உங்கள் அனுமதி வேண்டும் என்றனர். பிறகு அவர்கள் சொன்னபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

இதனை விட பெரிதாக எனக்கு கிடைக்காது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நடிகராக நான் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு. நான் நன்றாக நடிப்பேன் என எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என்றார். 

தி கிரே மேன் என்ற நாவலின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

SCROLL FOR NEXT