செய்திகள்

மீண்டும் 'ராஜா ராணி' கூட்டணி ? - நயன்தாராவின் 75வது படம் அறிவிப்பு

நயன்தாரா நடிக்கவிருக்கும் 75வது படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 

DIN

நயன்தாரா நடிக்கவிருக்கும் 75வது படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 

தனித்த கதாநாயகியாக நயன்தாரா நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இதன் காரணமாக ரசிகர்கள் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கின்றனர். 

சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா திருமணத்துக்கு பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் மட்டுமே நடிப்பார் எனவும் புதிய படங்களில் நடிக்க மாட்டார் எனவும் தகவல்கள் பரவின. 

இந்த தகவல்களை பொய்யாக்கும் விதமாக நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாராவின் 75வது படமான இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். 

மீண்டும் ராஜா ராணி கூட்டணி ?

இந்தப் படத்தில் ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராஜா ராணி படத்தில் ஜெய், நயன்தாரா, சத்யராஜ் கூட்டணி ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், இந்தப் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு சூது கவ்வும், கனா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT