செய்திகள்

அதே தாடி, அதே உருவம்... - வைரலாகும் பிரபு தேவாவின் மகன் படம்

நடிகர் பிரபு தேவா மறைந்த நடிகர் பாண்டுவுடன் தனது மகன் இருக்கும் படத்தைப் பகிர, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் பிரபு தேவா மறைந்த நடிகர் பாண்டுவுடன் தனது மகன் இருக்கும் படத்தைப் பகிர, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரபு தேவா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான பொன்மாணிக்க வேல்,  தேள் ஆகிய படங்கள் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தன. தற்போது பகீரா, பொய்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களில் பிரபு தேவா நடித்துவருகிறார். 

இதில் மை டியர் பூதம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் பிரபு தேவா பூதமாக நடித்துள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, என்.ராகவன் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் நடிகர் பிரபு தேவா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பாண்டு தனது மகனை ஆசிர்வதிக்கும் படத்தைப் பகிர்ந்து, உங்களை நான் நேற்று மாலையிலிருந்து நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் பிரபு தேவா மற்றும் பாண்டு இணைந்து நடித்த நினைவிருக்கும் வரை, டைம், ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதைத் தொட்டு, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. 

இதன் ஒரு பகுதியாக  நடிகர் பிரபு தேவா பகிர்ந்த படத்தில் அவரது மகன் தாடியுடன் இருக்கிறார். இதனையடுத்து அவரது மகன் காதலன் பட பிரபு தேவாவை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசின் முயற்சியை தடுக்க வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திமுகவினா் இன்று ஆலோசனை

தடையை மீறி பட்டாசு வெடித்த 1,000 போ் மீது வழக்கு

காவலா் வீர வணக்க நாள்: பாஜக, காங்கிரஸ் மரியாதை

வடகிழக்கு பருவமழை: போா்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக, காங்கிரஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT