செய்திகள்

அறிமுக இயக்குநரை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய ரஜினிகாந்த் - இயக்குநர் பகிர்ந்த தகவல்

நயன்தாராவின் 75வது பட இயக்குநரை தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

நயன்தாராவின் 75வது பட இயக்குநரை தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நயன்தாராவின் 75வது படம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ், டிரிடெண்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். இந்தப் படத்தின் போது நடிகர் ரஜினிகாந்த்துடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் இன்று (ஜூலை 12) நயன்தாரா பட அறிவிப்பு வெளியானதும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக நிலேஷ் கிருஷ்ணாவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இயக்குநர் நிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, என்றும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய நாள். நான் அறிமுகமாகும் நயன்தாரா படத்தின் பூஜையின்போது நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அழைத்தார். அவர் என்னை வாழ்த்தி, ஆசிர்வதித்தார். இதைவிட வேறு என்ன வேண்டும்? லவ் யூ தலைவா என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவத்துவருகின்றனர். இந்தப் படத்தில் சத்யராஜ் மற்றும் ஜெய் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ராஜா ராணி படத்துக்கு பிறகு ஜெய், நயன்தாரா, சத்யராஜ் கூட்டணி இணைவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

SCROLL FOR NEXT