முகப்பு
செய்திகள்

மேடம் அல்ல சார்: இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கனா ரணாவத், டீசர் வெளியீடு

கதை, படத் தயாரிப்பும் கங்கனா தான்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கும் எமர்ஜென்சி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் எமர்ஜென்சி என்கிற ஹிந்திப் படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் கங்கனா நடிக்கிறார். மேலும் அவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். அவர் இயக்கும் 2-வது படம் இது. கதை, படத் தயாரிப்பும் கங்கனா தான். திரைக்கதை, வசனம் - ரித்தேஷ் ஷா. 

எமர்ஜென்சி படத்தின் முதல் பார்வை போஸ்டரும் டீசரும் இன்று வெளியாகியுள்ளன. அதில் உள்ள காட்சியில் கங்கனாவிடம் அவருடைய உதவியாளர், உங்களை மேடம் என அழைக்கலாமா என அமெரிக்க அதிபர் கேட்கிறார் என்பார். அதற்குப் பதிலளிக்கும் கங்கனா, என்னுடைய அலுவலகத்தில் என்னை மேடம் என யாரும் அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக சார் என்றுதான் அழைக்கிறார்கள் என்பார். எமர்ஜென்சி படத்தின் முதல் பார்வை போஸ்டர், டீசருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →