ரஜினியுடன் லாரன்ஸ்! 
செய்திகள்

இப்போது யார் சந்திரமுகி? ரஜினியைச் சந்தித்தார் லாரன்ஸ்!

சந்திரமுகி ஹீரோ ரஜினியைச் சந்தித்தார் சந்திரமுகி-2 ஹீரோ ராகவா லாரன்ஸ்... இப்போது யார் சந்திரமுகி?

DIN

சந்திரமுகி -2 படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் சந்திரமுகியில் ஹீரோவாக நடித்து பிரமாண்டமான  வெற்றிப் படமாக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சந்திரமுகி-2 படத்தில் ரஜினி கேரக்டரின் தொடர்ச்சியாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இந்த நிலையில்தான் ரஜினிகாந்தைச் சந்தித்து ஆசி பெற்ற படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

நண்பர்களே, ரசிகர்களே! என்னுடைய தலைவர் மற்றும் குரு ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி - 2 படப்பிடிப்பு இன்று மைசூருவில் தொடங்குகிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துகளை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் லாரன்ஸ்.

நடிப்பில் இன்னொரு தளத்துக்குக் கொண்டுசென்று நடிகை ஜோதிகாவுக்குப் பெரும் புகழைத் தந்த சந்திரமுகி கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்? என்பது கோடி ரூபாய்க் கேள்வியாக இருந்தது. இதற்கும்  பதில் தெரிந்துவிட்டது - லட்சுமி மேனன்!

லட்சுமி மேனன்

நீண்ட காலம் தக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிறந்த நடிகையான லட்சுமி மேனனுக்கு இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT