செய்திகள்

ரன்பீர் - ஆலியா தம்பதிக்கு இரட்டை வாரிசு

ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரன்பீர் கபூர் தற்போது ஷம்சேரா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். தமிழிலும் இந்தப் படம் வெளியாகிறது. தமிழ்நாடு சார்பாக தொகுப்பாளர் டிடி மற்றும் சிவாங்கி உள்ளிட்டோர்  ரன்பீருடன் விளம்பர நிகழ்வில் பங்கேற்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் பக்கம் ஒன்றுக்கு ரன்பீர் பேட்டியளித்தார். அப்போது ஆலியா இரட்டைக் குழந்தைக்கு தாயாகப் போவதை மறைமுகமாக தெரிவித்தார். 

இரண்டு உண்மைகளையும் ஒரு பொய்யும் சொல்ல வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பிய போது, எனக்கு இரட்டைக் குழந்தை பிறக்கப்போகிறது, நான் மிகப்பெரிய புராண படமொன்றில் நடிக்கிறேன், நடிப்பதிலிருந்து இடைவேளை எடுத்துக்கொள்ளப்போகிறேன் என 3 பதில்களை அளித்தார். 

இதில் அவர் முதலில் சொன்ன 2 பதில்களும் உண்மை, 3வது பதில் பொய்யாக இருக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. ஏனெனில் அவர் நடிப்பதிலிருந்து இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டார் என ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

இந்திய விளையாட்டு பொருளாதாரத்தின் முக்கியமான காலகட்டம்... ஜியோ ஸ்டார் சிஇஓ பேட்டி!

ஏதேன் தோட்ட ஏஞ்சல்... ஆஷிகா!

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT