நடிகை இலியானா பிரபல நடிகையான கேத்ரினா கைஃபின் சகோதரரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
கேடி, நண்பன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் மட்டும் அவர் நடித்தவருகிறார்.
சமீபத்தில் நடிகை கேத்ரீனா கைஃபின் 39வது பிறந்த நாள் விழா சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. கொண்டாட்டத்தில் இலியானாவும் கலந்துகொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | 'இரவின் நிழல்' மீதான விமர்சகரின் குற்றச்சாட்டு உண்மையா? என்ன சொல்கிறார் பார்த்திபன் ?
இந்த நிலையில் கேத்ரீனாவின் சகோதரர் செபாஸ்டியனுடன் இலியானா காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்துவருகின்றனராம். இந்த செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டுவருகிறது.
இலியானா கடைசியாக தி பிக் பல் என்ற படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக அன்ஃபேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் நடித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.