'மாட்னா காலி’ சந்தோஷ் நாராயணன் நடனத்தில் ’குலுகுலு’ பாடல்
‘குலுகுலு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாட்னா காலி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
‘குலுகுலு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாட்னா காலி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார். மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ரத்னகுமார் இயக்கியுள்ள ’குலுகுலு’ திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் கடந்த ஜூலை 13 ஆம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில், இன்று சந்தோஷ் நாராயணன் நடனத்தில் ‘மாட்னா காலி..மாட்டாத வரை ஜாலி’ என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடத்தல் தொடர்பாக உருவாகியுள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.