செய்திகள்

டிஆர் 'மீண்டு'ம் வரார் - வைரலாகும் புகைப்படங்கள்

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த டி.ஆர் முற்றிலும் குணமான நிலையில் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

DIN


அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த டி.ஆர் முற்றிலும் குணமான நிலையில் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவரது மகன்கள் சிம்பு மற்றும் குறளரசன் ஆகியோர் அவரை உடனிருந்து கவனித்துக்கொண்டனர். 

சிகிச்சைக்கு பிறகு முற்றிலும் குணமான டி.ஆர், அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்டது. இதனையடுத்து தந்தை குணமானதால் சென்னை திரும்பிய நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் ஓய்வுக்கு பிறகு நாளை(ஜூலை 22) அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் டி.ஆர். அவரது மனைவி, மகன் குறளரசன் ஆகியோர் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT