செய்திகள்

’நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்...’: தேசிய விருது குறித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

‘நீங்கள் நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

DIN

‘நீங்கள் நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமா 10 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் 5 விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், ’சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அக்குறிப்பில்,  ’ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்... ஒருநாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.. நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின் அந்த நாள் வந்துள்ளது..’ எனத் தெரிவித்ததுடன் குடும்பத்தினருக்கும் ‘சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT