செய்திகள்

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றாரா? சின்னத்திரை நடிகர் விளக்கம்

சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

DIN

சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் புலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து வருகிறார். 

இந்தத் தொடரில் அவர் நாயகி வெண்ணிலாவின் கல்லூரி தோழராக நடிக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோன்ற விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு தலை காதலால் இப்படி நிகழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார். 

இதனையடுத்து அவர் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ராகவேந்திரன் விளக்கமளித்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் பேசியதாவது, நான் ஏன் தற்கொலைக்கு முயலப்போகிறேன்? நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். நகைச்சுவைக்காக அந்த விடியோவை பகிர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT