செய்திகள்

துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' பட டிரெய்லரை வெளியிட்ட கார்த்தி

துல்கர் சல்மானின் சீதா ராமம் பட டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். 

DIN

துல்கர் சல்மானின் சீதா ராமம் பட டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இதனை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

விஷால் சந்திரசேகர் இசையில் இந்தப் படத்திலிருந்து பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

முதல்வருக்கு பயம் ஏன்? 130 வது சட்டப்பிரிவு பாஜகவிற்கும் பொருந்தும்! அண்ணாமலை பேட்டி

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! செய்திகள்:சில வரிகளில் | 25.8.25 | MKStalin

SCROLL FOR NEXT