செய்திகள்

கலகத் தலைவனாக உதயநிதி - வெளியான புதிய பட போஸ்டர் விடியோ

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் கலகத் தலைவன் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் கலகத் தலைவன் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் , பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவப்படவிருக்கிறது. மாமனிதன் படத்துக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார், முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறார் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலகத் தலைவன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தடையற தாக்க, மீகாமன், தடம், உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி இசையமைக்கின்றனர். 

இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT