செய்திகள்

வெளியானது தனுஷின் 'வாத்தி' பட முதல் பார்வை - டீசர் ?

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

DIN

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தெலுங்கில் தனுஷின் வேலையில்லாத பட்டதாரி மற்றும் மாரி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தெலுங்கிலும் சார் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 இந்தப் படத்தின் டீசர் நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்தப் படத்தை தயாரித்துவரும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT