செய்திகள்

'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன், சுந்தரசோழனாக பிரகாஷ் ராஜ், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ வருகிற ஜூலை 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடலை கவிஞரும் எழுத்தாளருமான இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

SCROLL FOR NEXT