செய்திகள்

கார்த்தியின் 'விருமன்' படத்துக்கு கிடைத்துள்ள சென்சார் விவரம்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். முத்தையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தப் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மற்ற பாடல்களும் டிரெய்லரும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாம். அதாவது பெற்றோர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பது அதன் பொருள். 

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க, ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். முத்தையா - கார்த்தி கூட்டணியில் முன்னதாக வெளியான கொம்பன்  படம் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT