செய்திகள்

சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு மேலும் ஒரு கௌரவம் !

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள இந்திய திரைபப்ட விழாவில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்திருந்த இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், ரஜிஷா விஜயன், எம்.எஸ். பாஸ்கர், குமாரவேல், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். சமூகத்தில் பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. 

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்தது போல, வருகிற 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது ஜெய் பீம் படத்துக்கு கிடைக்கும் என்பது அனைவரின் கணிப்பாக உள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மேலும் ஒரு கௌரவமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெறவிருக்கிற இந்திய திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்படவிருக்கிறதாம். அங்கும் சில விருதுகளை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

SCROLL FOR NEXT