செய்திகள்

ஓடிடியில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் புதிய சாதனை

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஹிந்தி மொழி  ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் புதிய சாதனையை அடைந்துள்ளது.

DIN

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஹிந்தி மொழி  ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் புதிய சாதனையை அடைந்துள்ளது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன்  உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது. 

இதற்கிடையே, மே 20 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளின் பதிப்பு ஜீ5 ஓடிடியிலும் ஹிந்தி ’ஆர்ஆர்ஆர்’ நெட்பிளிக்ஸிலும் வெளியானது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களில் நெட்பிளிக்ஸில் ஆங்கிலம் அல்லாத பிறமொழித் திரைப்படங்களில் அதிக நேரம் பார்க்கப்பட்ட (1,85,60,000 மணி நேரங்கள்) திரைப்படம் என்கிற சாதனையை ‘ஆர்ஆர்ஆர்’ பெற்றுள்ளது. 

இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT