உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் புதன்கிழமை இரவு திரையிடப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ளதால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் நேற்று இரவு 8.10 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் கமல்ஹாசனும் பங்கேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.