செய்திகள்

''ரொம்ப திமிரா நடந்துக்கிட்டாங்க'' - பீஸ்ட் நாயகி குற்றச்சாட்டு

விமான ஊழியர் தன்னிடம் திமிராக நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

விமான ஊழியர் தன்னிடம் திமிராக நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார். 

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் தோல்வியடைந்ததால் அவருக்கு தமிழில் போதிய வாய்ப்புகள் அமையவில்லை. 

தெலுங்கில் தடம் பதித்த அவர் தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகியாக வலம்வந்தார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த அல வைக்குந்தபுரமுலோ  வெளியாகி அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. 

குறிப்பாக அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஒரு படத்தின் வெற்றியால் தென்னிந்திய அளவில் உருவான பெரிய நட்சத்திரங்களின் படங்களில் அவர் தான் நாயகியாக இருந்தார். நடிகர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அங்கு பணியிலிருந்த ஊழியர் ஒருவர் தன்னிடம் திமிராக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினார். அவரது பதிவுக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT