செய்திகள்

''பலாப்பழ பிரியாணி...'' விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுகள்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுப்பட்டியல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் இன்று (ஜூன் 9) காலை மாமல்லபுரத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், இயக்குநர் அட்லி, சரத் குமார், ராதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மேற்பார்வையில் திருமணம் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் திருமண நிகழ்வின்போது பரிமாறப்படும் உணவுகள் கொண்ட உணவு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், பலாப்பழ பிரியாணி, பொன்னி அரிசி சாதம், பருப்பு கறி, அவியல், சேனைக் கிழங்கு வருவல், வாழைக்காய் வருவல், கேரட் மற்றும் பீன்ஸ் பொறியல், சாம்பார் சாதம், பனீர் பட்டாணி கறி, காளான் மிளகு வருவல், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையாறு துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

யுபிஐ பரிவா்த்தனை: நடப்பு நிதியாண்டில் 230 லட்சம் கோடியைக் கடந்து சாதனை

நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு

ஸ்கேன் அறிக்கை மாற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 45,000 வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT