செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து: நடிகை ரம்யா காவல்துறையிடம் புகார்

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி ஆபாசமான கருத்து தெரிவித்தவர் மீது நடிகை ரம்யா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

DIN

இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி ஆபாசமான கருத்து தெரிவித்தவர் மீது நடிகை ரம்யா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

தமிழில் சிம்புவுடன் இணைந்து குத்து, தனுஷூடன் இணைந்து பொல்லாதவன் படங்களில் நடித்தவர் திவ்யா. தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்து தெரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூரு நகர சைபர் குற்றவியல் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

 திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்க பதிவில், அவர் குறித்து ஒருவர் ஆபாசமாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்து கூறியவர் மீது ரம்யா பெங்களூர் நகர சைபர் குற்றவியல் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து அந்த நபர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 2008-ன் படி வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான திவ்யா, காங்கிரஸ் கட்சி சார்பாக அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT