செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் 'இடி முழக்கம்' பட போஸ்டரை வெளியிட்ட உதயநிதி

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இடி முழக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

DIN

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இடி முழக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

மாமனிதன் படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இடி முழக்கம் என்ற படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

இடி முழக்கம் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்தப் படத்தை ஸ்கை மேன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

எம்பிக்கள் குடியிருப்பில் தீ விபத்து!

நிச்சயதார்த்தம் உண்மையா? வதந்தியா? ரஷ்மிகா மந்தனா பதில்!

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

SCROLL FOR NEXT