செய்திகள்

சிம்பு படத்துடன் மோதும் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'? வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. 

DIN

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு 4வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் தனுஷ் இணையும் படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்துக்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படமும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகலாம் என்று தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

திருச்சிற்றம்பலம் படத்தில் பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா என மூன்று நாயகிகள் உள்ளனர். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT