சசிகுமாரின் காரி பட டிரெய்லரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
சசிகுமார் நடித்துள்ள காரி படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
சசிகுமார் நடித்துள்ள காரி படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் படம் காரி. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சசிகுமாருடன் பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்க்ஸ்லே, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி. இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Advertisement
கணேஷ் சந்திரா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.