செய்திகள்

கமலுடனான சந்திப்பில் நடந்த சுவாரசியம் ... சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பகிர்ந்த தகவல்

விக்ரம் பட வெற்றிவிழாவின்போது கமல்ஹாசனுடன் இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

DIN

விக்ரம் பட வெற்றிவிழாவின்போது கமல்ஹாசனுடனான சந்திப்பில் நடந்த சுவாரசியமான தகவல்களை இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விக்ரம் படம் வெற்றிவிழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தனது பங்காக ரூ.75 கோடி கிடைத்ததாக தெரிவித்தார். இதுவரை எந்தத் தமிழ் படமும் இந்த அளவுக்கு வசூல் சாதனை செய்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

கமல்ஹாசன் பேசும்போது, லோகேஷின் அடுத்தப் படத்துக்காக என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் எனவும், அந்தப் படமும் எனது படம்தான் எனவும் தெரிவித்தார். தளபதி 67 படத்தைத் தான் அவர் சொல்கிறார் என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள். 

விக்ரம் பட வெற்றி விழாவில் பிரபலங்கள் பலரும் கமலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக இன்று நேற்று நாளை, அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் வியந்து பார்த்த ஆளுமை அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்.

அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டராவல்  பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். வேற்றுகிரக வாசிக்கும் மனிதருக்குமிடையேயான நட்பு தான் இந்தப் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

SCROLL FOR NEXT