செய்திகள்

பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா ? ஜெயிலர் சர்ச்சை பதிவு குறித்து சுரேஷ் காமாட்சி விளக்கம்

ஜெயிலர் படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பதிவு தவறாக சித்திரிக்கப்பட்டது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

DIN

ஜெயிலர் படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பதிவு தவறாக சித்திரிக்கப்பட்டது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்துக்கு ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைக்கவிருப்பதாகவும், சிவராஜ்குமார் நடிக்கவிருப்பதாகவும், பல்வேறு தகவல்கள் பரவின. இதில், சிவராஜ்குமார் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில் ஜெயிலர் பட அறிவிப்பு போஸ்டரை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த வகையில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எத்தனை குதிரைகள் ஓடினாலும் ரஜினிகாந்த் இந்த குதிரை விழும், சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. 

சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும். எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை தவறாக சித்திரித்து ஜெயிலர் படத்தை சுரேஷ் காமாட்சி கிண்டலடித்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. 

அதற்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக, பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாம சாமியாடுவாங்க என காட்டமாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்கான் கோயிலில் ஆக.15-இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

செங்குன்றத்தில் இளைஞா் கொலை: இருவா் கைது

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT