செய்திகள்

மிதாலி ராஜ் படம்: டிரெய்லர் வெளியானது

DIN

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 

2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ். மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடித்துள்ள படத்தை ராகுல் தொலாகியா இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. சபாஷ் மித்து படத்தை இயக்குவதிலிருந்து அவர் திடீரென விலகினார்.  அதற்குப் பிறகு ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். 

இந்த வருடம் பிப்ரவரி 4 அன்று படம் வெளிவருவதாக இருந்தது. பிறகு வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாஷ் மித்து படம், ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சபாஷ் மித்து படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

டெஸ்டில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் எடுத்துள்ளார் மிதாலி ராஜ். அதேபோல டெஸ்டில் 4 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் டி20யில் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது.  1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT