செய்திகள்

''விஜய் அனுப்பிய புகைப்படத்தில் அவரது மகன்..'' : யுவன் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

விஜய்யின் மகன் குறித்த சுவாரசியத் தகவலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்துகொண்டார். 

DIN

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா தனது 16 வயதில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படம் வெளியாகி 25 வருடங்களாகிறது. அந்த வகையில் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமாகி கால் நூற்றாண்டை கடந்துள்ளார். 

இந்த நிலையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகளானதையொட்டி, யுவன் ஷங்கர் ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது பேசிய அவர், நடிகர் விஜய்யின் மகன் யுவனிஸம் என்று உடையில் எழுதியிருக்கும் புகைப்படத்தை அவரது மேலாளர் ஜெகதீஷ் எனக்கு அனுப்பினார். பின்னர் ஒரு நாள் நான் நடிகர் விஜய்யை சந்தித்தேன்.

அப்போது அவர், 'என் மகன் உங்களது தீவிர ரசிகன். நான்தான் அந்தப் புகைப்படத்தை உங்களுக்கு அனுப்ப சொன்னேன். எப்பொழுதும் உங்களது பாடல்களைத் தான் கேட்பார்'' என்று கூறினார். தலைமுறைகள் கடந்தும் என் பாடல்கள் ரசிக்கப்படுவதை எண்ணி, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார். 

மேலும், ''பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன். அவர் நல்ல எழுத்தாளர். நானும் அவரும் இணைந்து நிறைய வெற்றிப் பாடல்களில் பணிபுரிந்திருக்கிறோம். இசையைக் கொடுத்த சிறிது நேரத்தில் பாடல் எழுதக் கூடியவர்'' என்று குறிப்பிட்டார்.

மேலும் என்னுடன் பணியாற்றிய பாடலாசிரியர்கள் பா.விஜய் சினேகன் ஆகியோருக்கு நன்றி.நான் பயணங்களில் அதிகம் என் அப்பா இளையராஜா பாடல்களைக் கேட்பேன் இவ்வாறு பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தாரில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வா் உத்தரவு

ஹாக்கி: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா..!

“இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருந்தது...” -புஜாராவைப் பாராட்டிய பிரதமர் மோடி!

வீட்டுக்கொருவர் ஐ.ஏ.எஸ். அலுவலர்!

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT