செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு புரட்சி நாயகன் பட்டம் கொடுத்த சத்யராஜ்: ''எம்ஜிஆருக்கு பிறகு...''

எதற்கும் துணிந்தவன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை நடிகர் சத்யராஜ் வழங்கினார். 

DIN

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக எதற்கும் துணிந்தவன் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் உருவாக்கியுள்ளது. 

வழக்கமாக இயக்குநர் பாண்டிராஜ் குடும்ப உறவுகளுக்கிடையேயான பாசப்போராட்டமே படமாக இருக்கும். இந்தப் படம் சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாம். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்ற படத்தை அளிக்கிறேன். எம்ஜிஆருக்கு பிறகு திரையிலும், நிஜ வாழ்விலும் நடிகர் சூர்யா ஒரே மாதிரி இருக்கிறார் என்றார். 

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து டி.இமான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

கடல் பயணம்... கௌரி வினீத்!

ஒவ்வொரு பார்வையிலும் கம்பீரம்... ரூமா சர்மா!

SCROLL FOR NEXT