செய்திகள்

மனைவியுடன் விபத்தில் சிக்கிய சன் டிவி நடிகர்

சின்னத்திரை நடிகர் மனோஜ் குமார் மனைவியுடன் விபத்தில் சிக்கியுள்ளார். 

DIN

தமிழில் ராஜ்ஜியம், வானவில், செந்தமிழ் செல்வன், வண்டிச்சோலை சின்ராசு போல படங்களை இயக்கியவர் மனோஜ் குமார். இவர் இயக்குநர் பாரதிராஜாவின் உறவினரும் கூட. 

கேடி பில்லா கில்லாடி ரங்கா, அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல, விஜய் டிவியின் நம்ம வீட்டுப் பொண்ணு, கலர்ஸ் தமிழின் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

வானத்தைப் போல தொடரில் இவர் நடித்து வரும் முத்தையா வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பெரிய அளவில் இருவரில் காயங்கள் இல்லையென்றாலும் குணமாக சில வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக அவர் தொடரிலிருந்து மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே இந்தத் தொடரிலிருந்து சின்ராசு வேடத்தில் நடித்த தமன், துளசி வேடத்தில் நடித்த ஸ்வேதா ஆகியோர் மாற்றப்ட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT