முகப்பு
செய்திகள்

'கேஜிஎஃப் 2' டிரைலர் தேதி அறிவிப்பு

யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளீயிட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Updated On : 4 மார்ச், 2022 at 5:23 PM
பகிர்:

யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளீயிட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான 'கேஜிஎஃப்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் பெரிய சாதனையைப் படைத்தது.

பின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளும் தொடர்ந்து முடிவடைந்தது. இருப்பினும், கரோனா காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

Advertisement

இந்நிலையில், கேஜிஎஃப் 2-ன் டிரைலர் வருகிற மார்ச் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.