செய்திகள்

’விக்ரம்’ வெளியீட்டுத் தேதி குறித்து புதிய அறிவிப்பு

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலில் இருந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வருகிற மார்ச்-14 ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT