செய்திகள்

சமீபத்தில் வெளியான படத்தை திரையரங்கில் பார்த்து விமர்சித்த தனுஷ் : ''என்னால் பேச முடியல''

நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியான படம் குறித்து தனது விமர்சனத்தை விடியோ மூலம் பதிவு செய்துள்ளார். 

DIN

நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஜுன்ட் படம் இன்று (04.03.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க முயற்சிக்கும் பேராசிரியராக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த தனுஷ், படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். தனுஷ் பேசியதாவது, ''எனக்கு எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. படம் மிக சிறப்பாக இருந்தது. தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து 1000 முறை என்னால் பேச முடியும். உணர்வுப்பூர்வமான அனுபவம். 

இது மிகச்சிறந்த படம். இந்தப் படம் பார்த்தில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் என் மனதைக் கவர்ந்துவிட்டார்கள். எனக்கு பேசமுடியவில்லை. 

மேலும் அமிதாப் பச்சன் இந்தப் படத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இந்த மாதிரி ஒரு படத்தைக் கொடுத்ததற்கு நாகராஜ் மஞ்சுலேவிற்கு நன்றி. ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT