செய்திகள்

''கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில்....'': ரஹ்மானுக்கு பதிலளித்த இளையராஜா

ரஹ்மானின் கோரிக்கையை ஏற்பதாக இளையராஜா பதிலளித்துள்ளார்.  

DIN

இளையராஜா சமீபத்தில் துபையில் நடைபெற்ற துபை எக்ஸ்போ நிகழ்ச்சியில் தனது இசைக்கச்சேரியை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர். 

இதன் ஒரு பகுதியாக இளையராஜா ரஹ்மானின் ஃபிர்டாஸ் ஸ்டுடியோவிற்கு சென்றார். அவருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஸ்டுடியோவைக் காட்டினார்.

அப்போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்த ரஹ்மான், ''எங்களது ஃபிர்டாஸ் ஸ்டுடியோவிற்கு மேஸ்ட்ரோ  இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவில் எங்களது ஃபிர்டாஸ் இசைக்குழு இசைப்பதற்காக ஒரு இசையை உருவாக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டிருந்தார். 

இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இருவரையும் இணைத்து பார்ப்பது எங்களுக்கு அற்புதமான நாள் என பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலளித்த இளையராஜா, ''கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT