செய்திகள்

வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்போடும் சின்னத்திரை நடிகை: ''உங்க அதிர்ச்சி புரியுது, ஆனா''

கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் சின்னத்திரை நடிகையின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

'மகாபாரதம்', 'சந்திரலேகா', 'பைரவி' தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். சன் டிவியில் சன் குடும்பம் அவார்ட்ஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். 

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் நடனமாடியிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு கல்கி பிரயா எனப் பெயரிட்டுள்ள ஐஸ்வர்யா, மகளின் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.  

இந்த நிலையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு கர்ப்பமாக இருந்தபோது நடனமாடிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ''இந்த விடியோவைப் பார்க்கும்போது நீங்கள் அதிர்ச்சியாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. 

அதிலிருந்து நானும் வித்தியாசமானவள் அல்ல. எனக்கும் குழப்பங்கள் இருந்தது. ஆனால் என்னுடைய குழப்பங்கள் குறித்து விளக்கமளித்த மருத்துவர் எப்பொழுதும்போல என் வாழ்க்கையை வாழ சொன்னார். 

நான் என் வாழ்நாளில் நடனக் கலைஞராக இருந்தேன். அதனால் மருத்துவரின் அனுமதியுடன் என் நடனத்தைத் தொடர்ந்தேன். உடற்பயிற்சி செய்தல், வீட்டுவேலைகளை கவனித்துக்கொள்ளுதல் என எப்பொழுதும்போல என் கடமைகளை செய்தேன்.

இதன் காரணமாக நான் மிக சக்திவாய்ந்தவளாக உணர்ந்தேன் இது எனக்கு ஆச்சரியமாக இறுந்தது. தாய்மார்கள் சுறுசுறுப்பாக இருந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 

இது என் முதல் குழந்தை. அதனால் நான் அறிவுறை சொல்லும் அளவுக்கு மேதையல்ல. ஆனால் நான் ஒவ்வொரு நொடியையும் மகிழ்வாக கழித்ததே என்னுடைய குழந்தை ஆரோக்கியமாக இருந்தற்கும், எனக்கு சுகப்பிரசமானதற்கும் காரணம் என்பதை உறுதியாக சொல்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”எல்லா கட்சிக்காரர்களும், ’தவெகவுக்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள்” செங்கோட்டையன் Speech | TVK

வெகுவிமர்சையாக நடைபெற்ற நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

விஜய்யைப் பார்த்ததும் ஆர்ப்பரித்த தொண்டர்கள்! காதை மூடி சிரித்த விஜய்! | TVK

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகள் திறப்பு

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT