செய்திகள்

கார்த்தி என் தம்பியா? பிருந்தா புகைப்படத்துடன் விளக்கம் : கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா ?

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

DIN

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் சகோதரியான பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட சிறிய வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அவரது பதிவில், எனக்கு மிகவும் விருப்பமான படம். எனக்கு எப்பொழுதும் எனது சகோதரர்கள் போல இருக்க வேண்டும். அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடியை நீளமாக வளர்ப்பதை வெறுப்பேன். ஏனெனில் நான் என் சகோதரர்களிடமிருந்து வித்தியாசமாக தெரியக் கூடாது என்பதற்காக. 

நான் கல்லூரி படிக்கும் வரை என் மூத்த அண்ணனின் சட்டையையும், இளைய அண்ணனின் ஜீன்ஸையும் அணிவேன். இப்பொழுதாவது நான்தான் இளையவள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 

இப்பொழுதும் மக்கள் என்னிடம் கார்த்தி என் தம்பியா எனக் கேட்பார்கள். இனிமேல் அப்படிக் கேட்காதீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, ''உன்னை விட நான் இளமையாக தெரிவதற்கு, என்னால் என்ன செய்ய முடியும் ?''எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ''நீங்கள் மூவரும் மிக அழகாக இருக்கிறீர்கள்'' என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT