முகப்பு
செய்திகள்

’விக்ரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த  அறிவிப்பை போஸ்டருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த  அறிவிப்பை போஸ்டருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலில் இருந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வருகிற மார்ச்-14 ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இச்செய்தியைப் புதிய போஸ்டருடன்  பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →