செய்திகள்

கே.எஸ். ரவிகுமார் நடித்த கூகுள் குட்டப்பா டிரெய்லர் வெளியானது

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

DIN

2019-ல் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. சுராஜ், செளபின் போன்றோர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பெற்றுள்ளார். கமல் நடித்த தெனாலி படத்துக்குப் பிறகு 21 வருடங்கள் கழித்து அடுத்த படத்தை அவர் தயாரிக்கிறார். 

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள். கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் கூகுள் குட்டப்பாவை இயக்கியுள்ளார்கள். இசை - ஜிப்ரான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்லர் : பிரதமருக்கு கடிதம்

இஷான் கிஷன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

அப்பா வழியில் முதல்வரானவர் மு.க. ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி

SK26 | அறிவிப்பை வெளியிட்ட RKFI! | Cinema Updates | Dinamani Talkies

இருசக்கர வாகன பிரிவில் வளர்ச்சியை அதிகரிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்!

SCROLL FOR NEXT