செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இயக்குநர் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் 'சாணிக்காயிதம்'

செல்வராகவகவன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக்காயிதம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம். இதுகுறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

'சாணிக் காயிதம்' திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ராக்கி' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், சாணிக்காயிதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்துக்க சாம் சிஎஸ் இசையமைக்கிறார். முதலில் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படத்திலிருந்து யுவன் விலக, அவருக்க பதிலாக சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% எட்டியுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! - ஐ.நா தகவல்

சுல்தானா... பிரியா வாரியர்!

ரூ.27,804 சம்பளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் வேலை!

ரெட்ட தல டீசர் அப்டேட்!

SCROLL FOR NEXT