செய்திகள்

''நீங்க பிரபலமா இருக்கலாம், ஆனா...'' : நடிகை கங்கனாவுக்கு நீதிமன்றம் அறிவுரை

நடிகை கங்கனாவுக்கு மும்பை நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  

DIN

நடிகை கங்கனா ரணாவத் தன்னைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரவாதிலிருந்து தனக்கு நிரந்தர விலக்கு அளிக்கும்படி நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்தார். நடிகை கங்கனாவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை கடுமையாக சாடியது. 

இதுகுறித்து நீதிபதி ஆர்ஆர் கான் தெரிவித்ததாவது, ''கங்கனா ஒரு பிரபல நடிகையாக இருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் அவர் குற்றம்சாட்டப்பட்டவர். அவர் நிரந்தரமான விலக்கு கோரமுடியாது. அவர் ஜாமீன் நிபந்தனைகளை முறையாக பின்பற்ற வேண்டும். 

மேலும் அவருக்கு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தால் புகார்தாரர் கடுமையான பாரபட்சத்துக்கு ஆளாக நேரிடும். வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இருக்காது'' என்றும் குறிப்பிட்டார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT