செய்திகள்

தமிழில் ரீமேக்காகும் மோகன்லாலின் மகன் படம்: அதிகாரப்பூர்வ தகவல்

மலையாள படமான ஹிரிதயம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகிறது. 

DIN

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் நாயகனாக நடித்த ஹிரிதயம் கடந்த ஜனவரியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வினித் ஸ்ரீநிவாசன் இயக்கியிருந்தார். 

இந்தப் படத்தில் பிரணவுடன் கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா உள்ளிட்டோர் நாயகிககளாக நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஹேசம் அப்துல் வாஹேப் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாஹேபை ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மோகன்லாலின் மகன் பிரணவும், இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, நடிகர் ஸ்ரீநிவாசனின் மகன் வினித் இயக்கிய இந்தப் படம் மலையாள சினிமாவில் வாரிசுகள் இணைந்து உருவாக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. விரைவில் தமிழில் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT