செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' பட முக்கிய காட்சி யூடியூபில் வெளியானது

ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி படத்திலிருந்து சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் வெற்றிமாறனின் உறவினரும், உதவியாளருமான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'செல்ஃபி'. இயக்குநர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 

இந்தப் படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி யூடியூபில் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை கதைக் களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் பாமக இளைஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT