சம்பளத்தை உயர்த்திய கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல்: இத்தனை கோடிகளா?
கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துள்ளார்.
கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அதன் வசூல் வேட்டை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூல் செய்த திரைப்படங்களில் கேஜிஎஃப்-ம் இடம்பெற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில், கேஜிஎஃப்-ன் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு தெலுங்கில் படம் இயக்க நிறைய வாய்ப்புகள் வருவதாகவும் பல தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாலும் பிரசாந்த் நீல் தன் சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உறுதியானால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநரான ராஜமௌலிக்கு அடுத்து 2-வது இடத்தில் பிரசாந்த் நீல் இருப்பார்.