செய்திகள்

அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல மலையாள நடிகை

வலிமை படத்துக்கு அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் அஜித்.

DIN

அஜித் 61 படத்தின் கதாநாயகியாகப் பிரபல நடிகை மஞ்சு வாரியர் தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்துக்கு அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படம் தற்போதைக்கு ஏகே 61 என அழைக்கப்பட்டு வருகிறது. அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 11 அன்று படப்பிடிப்பு தொடங்கியது. 

இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், அஜித் 61 படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். படப்பிடிப்பில் அவர் விரைவில் இணைவார் என்று அறியப்படுகிறது.

2019-ல் வெளியான அசுரன் படத்தில் தமிழில் அறிமுகமானார். மஞ்சு வாரியர். இதற்கு அடுத்ததாகத் தமிழில் அஜித்துடன் அவர் நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT