செய்திகள்

நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் தகவல்

ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசிய இந்தப் படம் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ளது.

DIN

ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசிய இந்தப் படம் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோஸ், பேவியூ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் மே 9ஆம் தேதி இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. நடிகர்கள் ஆரி, தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, அப்துல் லி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜிஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் மே 20ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT