பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - அனிருத். படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய்.
படத்தின் கடைசியில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலின் காணொளி யூடியூப் தளத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்தியா முழுக்க வரவேற்பைப் பெற்ற அரபிக் குத்து பாடலின் காணொளி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரபிக் குத்து பாடல் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இதனை விஜய் ரசிகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கெனவே அரபிக் குத்து லிரிக்கல் விடியோ யூடியூபில் இதுவரை 40 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.