செய்திகள்

வெற்றி மாறனின் 'அனல் மேலே பனித்துளி': புதிய தகவல்

வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் பல புதிய இயக்குநர்களை வெற்றிமாறன் அறிமுகம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஜெய்சர் ஆனந்த் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். 

ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'அனல் மேலே பனித்துளி' என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.

வெற்றி மாறனின் விருப்பமான ஒளிப்பதிவாளரான ஆர்.வேல்ராஜ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிந்தார். அதனைத் தொடர்ந்து சோனி லைவ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT